புதிய மாதம்! - புதிய மாற்றங்கள்!!

1 ஆவணி 2025 வெள்ளி 12:02 | பார்வைகள் : 3160
ஓகஸ்ட் 1 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை இன்று புதிய மாதத்தில் பிரான்சில் பல புதிய மாறுதல்கள் இடம்பெற உள்ளன. அவற்றை தொகுக்கிறது இந்த பதிவு.
Livret A!
Livret A சேமிப்புக்கணக்கின் வட்டி வீதம் வீழ்ச்சியடைகிறது. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு தானியங்கி முறையில் குறைக்கப்படும் இந்த வட்டி வீதம், தற்போது 2.4% சதவீதத்தில் இருந்து 1.7% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் பதிவாகும் இரண்டாவது வீழ்ச்சி இதுவாகும். முன்னதாக இவ்வருட பெப்ரவரியில் 3% சதவீதத்தில் இருந்து 2.4% சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Linky meter!!
வீட்டுப்பாவனைக்கான மின் அறவீடு பெட்டி Linky நிறுவனத்தின் பச்சை நிற பெட்டியாக இல்லாதவிடத்து, நீங்கள் மாதாந்தம் அதிக தொகையை கட்டணமாக பெற வாய்ப்புகள் உள்ளது.
மாதம் 6.48 யூரோக்கள் அல்லது ஆண்டுக்கு 38.88 யூரோக்கள் மேலதிக கட்டணம் செலுத்த நேரும். இன்று முதல் இது நடைமுறைக்கு வருகிறது. பிரான்சில் தற்போது 2.1 மில்லியன் பேர் பழைய மின் அறவீடு பெட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவற்றை இலகுவாக மாற்றியமைத்து மின் கட்டணங்களை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு, அவ்வகை மோசடிகளை தடுக்கும் முகமாக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின் கட்டணம் அதிகரிப்பு!!
VAT வரி அதிகரிப்பினால் மின்சார மற்றும் எரிவாயு கட்டணங்கள் அதிகரிக்க உள்ளன. 5.5% சதவீதத்தில் இருந்து 20% சதவீதமாக இந்த VAT வரி அதிகரிக்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கான அமெரிக்க வரி!!
30% சதவீத இறக்குமதி வரி என ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா அறிவித்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அந்த வரி 15% சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த வரி இன்று ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
பிரான்சில் இருந்து வைன் உள்ளிட்ட மதுபான வகைகள் பெருமளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவற்றுக்கான வரி அதிகரிப்பினால், பிரெஞ்சு உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி மற்றும் விற்பனை வீழ்ச்சியை எதிர்கொள்ளக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
l'allocation de rentrée!!
புதிய கல்வி ஆண்டுக்கான பாடசாலை கொடுப்பனவுகள் (l'allocation de rentrée) 3 மில்லியன் குடும்பங்களுக்கு இம்மாதம் 5 ஆம் திகதி முதல் Mayotte மற்றும் Réunion தீவுகளுக்கும், இம்மாதம் 19 ஆம் திகதி முதல் Guadeloupe, French Guiana மற்றும் Martinique தீவுகளுக்கும், பிரான்சின் பிரதான நிலப்பகுதிகளுக்கும் வழங்கப்பட உள்ளன.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025