Paristamil Navigation Paristamil advert login

இலங்கை மீதான வரியை குறைத்த டிரம்ப்

இலங்கை மீதான வரியை குறைத்த டிரம்ப்

1 ஆவணி 2025 வெள்ளி 14:09 | பார்வைகள் : 808


வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி வீதங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தெற்காசிய நாடுகளான பங்களாதேஷுக்கு 35% இலிருந்து 20% ஆகவும், பாகிஸ்தானுக்கு 30% இலிருந்து 19% ஆகவும் வரி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி வீதம் 27% ஆகவே நீடிக்கிறது. இது மாற்றப்படவில்லை.

மேலும், பிரேசிலுக்கு விதிக்கப்பட்ட 50% வரி வீதம் 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலுக்கு விதிக்கப்படும் வரி வீதம் 15% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட வரி வீதங்களில் மிக உயர்ந்த வீதமாக சிரியாவுக்கு 41% வரி விதிக்கப்படுகிறது. அதேவேளை லாவோஸ் மற்றும் மியான்மாருக்கு தலா 40% வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகையின் அறிக்கை தெரிவிக்கிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்