கூந்தல் பராமரிப்பில் நெல்லிக்காயின் பயன்கள் பற்றி தெரியுமா ?
 
                    1 ஆவணி 2025 வெள்ளி 14:26 | பார்வைகள் : 1592
கூந்தல் பராமரிப்புக்கென நெல்லிக்காய் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முடி உதிர்வதை தடுத்து, நீளமாக வளர செய்ய நெல்லிக்காய் எவ்வாறு உதவுகிறது என்பதை இங்கு காண்போம்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து மற்றும் உச்சந்தலை, முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது முடியின் வேர்க்கால்களுக்கு ஒரு புரதம் போல செயல்பட்டு, அவற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.முடி உதிர்வைத் தடுக்கும்: கடுமையான முடி உதிர்வை வெகுவாகக் குறைக்கும்.
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்: உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, மயிர்க்கால்களைப் புத்துணர்ச்சியடையச் செய்யும்.நரையைத் தடுக்கும்: இளநரையைத் தாமதப்படுத்த உதவும்.
பயன்பாட்டு முறைகள்: நெல்லிக்காய் எண்ணெய்யாக, பொடியாக அல்லது சாறாகப் பயன்படுத்தலாம். வழக்கமான பயன்பாடு, முடியை உயிர்ப்புடன் காட்சியளிக்கச் செய்யும்.
உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலோ, முடி அடர்த்தி குறைந்து மெல்லியதாக இருந்தாலோ நெல்லிக்காய் சிறந்த தீர்வாக அமையும். நெல்லிக்காய், முடி உதிர்வைத் தடுக்கவும், முடியை வலுப்படுத்தவும், அடர்த்தியை அதிகரிக்கவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்கள் முடி பிரச்சனைகளுக்கு ஏற்ப, நெல்லிக்காயைப் பயன்படுத்தி ஆரோக்கியமான கூந்தலைப் பெறுங்கள்!
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan