Paristamil Navigation Paristamil advert login

குப்பைக்கு செல்ல இருந்த உணவுகளை வழங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட விமான நிலைய ஊழியர்கள்!!!

குப்பைக்கு செல்ல இருந்த உணவுகளை வழங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட விமான நிலைய ஊழியர்கள்!!!

1 ஆவணி 2025 வெள்ளி 15:37 | பார்வைகள் : 1375


மாசெய் (Marseille-Provence) விமான நிலைய உணவகங்களில் பணியாற்றிய சப்ரி மற்றும் அவரது மூன்று சக ஊழியர்கள், வீணாகும் சாண்ட்விச்சுகளை தேவையுள்ளவர்களுக்கு வழங்கியதற்காக "கடுமையான தவறு" என்ற காரணத்தால் 2025 மார்ச் 15 அன்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலாளர்களின் அனுமதியுடன், உணவகங்களிலிருந்து, வீணாகும் உணவுகளை சப்ரி பகிர்ந்ததாகவும், பணம் எதுவும் வாங்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். இது விமான நிலையத்தில் வழக்கமான நடைமுறை என்றும், தனது செயல் மனிதாபிமானம் சார்ந்தது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

30 ஆண்டுகள் மாசெய் விமான நிலையத்தில் சீராக பணியாற்றிய சப்ரி, திடீரென வேலை இழந்தது அதிர்ச்சியளிக்கிறது எனக் கூறியுள்ளார். தொழிற்சங்கங்கள், மாநகராட்சி மற்றும் சமூக அமைப்புகளின் ஆதரவுடன், நீண்ட போராட்டத்திற்கு தயாராவும் உள்ளார். 

"நீதி கிடைக்கும்" என்பதிலும், மீண்டும் அதே நிலை ஏற்பட்டால் இரு முறை யோசிக்காமலே செய்யத் தயார் என்பதிலும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்