Paristamil Navigation Paristamil advert login

சிறப்புகளையும், அதிசயங்களையும் உள்ளிடக்கிய மனித உடல்

சிறப்புகளையும், அதிசயங்களையும் உள்ளிடக்கிய மனித உடல்

28 புரட்டாசி 2021 செவ்வாய் 15:42 | பார்வைகள் : 9434


 மனிதர்களின் உடலில் பல அதிசயங்கள் இருக்கின்றன. நம்முடைய ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு சிறப்புகளையும், அதிசயங்களையும் உள்ளிடக்கியதாகத்தான் இருக்கிறது. அவற்றில் சிலவற்றை அறிவோம்.

 
மனித உடலில் உள்ள நரம்புகளின் மொத்த நீளம், சுமார் 72 மீட்டர்.
 
 
நம் உடலில் உள்ள மொத்த ரத்தம் 5 லிட்டர். அது ஒரு நாளில், 30 கோடி கி.மீ. பயணிக்கிறது.
 
நுரையீரல் ஒரு நாளில், 23 ஆயிரத்து 40 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியிடுகிறது. நுரையீரலில் 3 லட்சம் மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இதனை ஒன்றிணைத்தால் 2 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தூரம் இருக்குமாம்.
 
இதயம், ஒரு நாளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 689 முறை துடிக்கிறது.
 
மனித உடலில் சதை அழுத்தம் அதிகமாக உள்ள பகுதி, நாக்கு. அதில் சுவையை அறியக்கூடிய 3 ஆயிரம் செல்கள் உள்ளன.
 
உடல் எடையில் 14 சதவீதம் எலும்பும், 7 சதவீதம் ரத்தமும் உள்ளது.
 
நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு சிறுநீரகமும், ஒரு மில்லியன் வடிகட்டிகளை கொண்டிருக்கிறது.
 
மனித கண்கள் 24 கிராம் எடை கொண்டது. ஆனால் அதற்கு 500 விதமான ஒளியை பிரித்தறியும் சக்தி உண்டு. கண்களின் தசை ஒரு நாளில், 1 லட்சம் முறை அசைகிறது. இந்த அசைவுக்கு நிகரான வேலையை உங்களுடைய கால்களுக்கு கொடுக்க வேண்டுமென்றால், நீங்கள் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்கிறது ஒரு ஆய்வு.
 
மனிதன் ஒரு அடி நடப்பதற்கு, 200 தசைகளின் அசைவுகள் தேவைப்படுகின்றன.
 
மனித மூளை 80 சதவீதம் நீரால் ஆனது. பகலை விட இரவில் அதன் செயல்திறன் அதிகமாக இருக்கும். சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 20 சதவீதம் மூளைக்கு செல்கிறது. நம்முடைய மூளையில் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. ஒருவர் 35 வயதை எட்டியது முதல் தினமும் 7 ஆயிரம் நரம்பு செல்கள் இறந்துகொண்டே வருமாம்.
 
மனித உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம், சுமார் 6 லட்சம் மைல்கள். இந்தத் தொலைவில் நாம் இந்த உலகத்தை இரண்டு முறை சுற்றி வந்துவிட முடியும்.
 
மனித உடலில் காணப்படும் மிகப்பெரிய செல், பெண்ணின் கரு முட்டை. சிறிய செல், ஆணின் விந்து.
 
மனிதன் இறந்தபிறகு, அவனுடைய கண்கள் 30 நிமிடங்களும், மூளை 10 நிமிடங்களும், கால்கள் 4 மணி நேரமும், தசைகள் 5 நாட்களும், இதயம் சில நிமிடங்களும் இயக்க நிலையிலேயே இருக்கும். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்