பிரான்ஸ் இனி புதிய காசா பாலஸ்தீனர்களை வரவேற்காது – ஒரு மாணவியால் ஏற்பட்ட சர்ச்சைக்குப் பிறகு அரசு நடவடிக்கை!

1 ஆவணி 2025 வெள்ளி 17:12 | பார்வைகள் : 1057
❝ஒரு 25 வயது காசா மாணவியால் ஏற்பட்ட யூத விரோத சமூக ஊடக பதிவுகள் தொடர்பான விவகாரம் தெளிவாக விசாரிக்கப்படும் வரை, புதிய பாலஸ்தீனர்களை காசா பகுதியிலிருந்து பிரான்சு வரவேற்காது.❞ என வெளிவிகார அமைச்சர் ஜோன்-நொயல் பரோ (Jean-Noël Barrot) தெரிவித்துள்ளார்
நடந்தது என்ன?
நூர் அத்தல்லாஹ் என்ற மாணவி 2025 ஓகஸ்ட் 11 அன்று பிரான்சுக்கு வந்தார்.
அவர் Sciences Po Lille எனும் உயர்கல்வி நிறுவனத்தில் சேர திட்டமிடப்பட்டிருந்தார்.
ஆனால், இந்த மாணவி, சமூக ஊடகங்களில் யூதர்களை கொல்ல அழைப்பு விடுக்கும் பதிவுகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் பதிவுளைப் பிரச்pனைகளின் பின்னர் அழித்திருந்தாலும் அவை மீளக் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனால் அவர் கல்வி நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டார்.
அதிகாரபூர்வ நீதிமன்ற விசாரணை பயங்கரவாதத்தைப் புகழ்தல், மனிதநேய எதிரான குற்றங்களைப் புகழ்தல் போன்ற குற்றங்களிற்காக ஆரம்பிக்கப்பட்டது. நிர்வாக விசாரணையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
'இந்த மாணவியை பிரான்சில் வரவேற்க வழிவகுத்த கண்காணிப்புப் பிழைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். அந்த வரம்புகள் திருத்தப்படுவதாகவும், இனி யாரும் காசாவிலிருந்து வர முடியாது' எனவும் வெளிவிவகார அமைச்சர் Jean-Noël Barrot தெரிவித்துள்ளார்.
பிரான்சுக்குள் வந்த அனைத்து காசா அகதிகளும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த மாணவி பிரான்சில் தங்கவேக்கூடாது – ஆனால், போரில் சிக்கிய காசாவுக்கு திருப்பி அனுப்பலாமா என்பதில் இன்னும் தீர்வு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் சமூக ஊடகக் கருத்துகள் உண்மை என உறுதி செய்யப்பட்டது. அந்த மாணவி ஜெருசலேமில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் பரிந்துரை மூலம் இந்தப் பயிற்சி திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்.
காசா மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்கும் என்பது ஒரு வருடத்தின் முந்தைய திட்டம்.
❝பிரான்சில் வரவேற்கப்படும் நபர்களின் பின்புலம் பற்றி நிரந்தர கண்காணிப்பு அவசியம். பிழைகள் ஏற்பட்டால், அதற்கான நடவடிக்கைகள் நிச்சயமாக இருக்க வேண்டும்❞ எனப் பிரதமர் பிரோன்சுவா பய்ரூ தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம், பிரான்சு – காசா இடையிலான அகதிகள் வரவேற்பு அரசியல் மற்றும் சமூக ஊடகங்களில் காணப்படும் வெறுப்புப் பேச்சின் தாக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025