உங்க திருமண வாழ்க்கையில் ரொமான்ஸ் காணாமல் போவதற்கான காரணம்

1 ஆவணி 2025 வெள்ளி 17:48 | பார்வைகள் : 153
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமண வாழ்க்கைக்குள் நுழையும் போது பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் நுழைவார்கள். ஆண், பெண் இருவருமே தங்கள் வாழ்க்கைத்துணை அழகானவராகவும், இனிமையானவராகவும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்க அதில் ரொமான்ஸ் நிறைந்திருக்க வேண்டியது அவசியம்.
ரொமான்ஸ் இல்லாத திருமண வாழ்க்கை விரைவில் சலித்து விடும். ரொமான்ஸ் இல்லாத திருமண வாழ்க்கையை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல தம்பதிகளின் திருமண வாழ்க்கை ரொமான்ஸ் இல்லாமல் சலிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. திருமண வாழ்க்கையில் ரொமான்ஸ் இல்லாமல் போவதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்பு இல்லாமை
ஒரு திருமண உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது தம்பதிகள் இருவரும்தான். தம்பதிகள் இருவரும் தங்களுக்குள் வெளிப்படையாகப் பேச வேண்டும். விஷயங்களை வெளிப்படையாகப் பேசினால் மட்டுமே திருமண உறவு பலப்படும். தகவல் தொடர்பு முறிவு தவறான புரிதல்களுக்கும் ஏமாற்றத்திற்கும் வழிவகுக்கும். எனவே, திருமணத்தில் ரொமான்ஸ் இல்லாமல் போவதற்கு முதன்மையான காரணம் தொடர்பு இல்லாததுதான்.
மன அழுத்தம் மற்றும் அவசரம்
சில சமயங்களில், வருடங்கள் செல்லச் செல்ல, திருமண உறவில் ரொமான்ஸ் குறைந்துவிடும். இதற்கு முக்கிய காரணம், துணையில் ஒருவர் அல்லது இருவரின் வேலைப்பளு அல்லது மன அழுத்தமாக இருக்கலாம். மன அழுத்தமும், வேலைப்பளுவும் திருமணத்தைக் கொல்லும் காரணிகளாக மாறிவருகிறது. தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகள் அதிகரிக்கும் போது,அவர்கள் காதலுக்கான சக்தியை இழக்கிறார்கள். இது ரொமான்ஸ் குறைவதற்கு வழிவகுக்கும்.
புதிதாக எதுவும் இல்லாமல் போவது
திருமணம் முடிந்து காலம் செல்லச் செல்ல, திருமணத்தில் புதிதாக எதுவும் நடக்காது. அனைத்து நாட்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான செயல்களை செய்வது அவர்களுக்கு சலிப்பையும், ஆர்வமின்மையையும் ஏற்படுத்தும். திருமணத்திலிருந்து காதல் மறைந்து போவதற்கும் இதுவும் முக்கிய காரணமாகும்.
புறக்கணிப்பு
திருமண உறவில் ஒருவர் துணையிடமிருந்து புறக்கணிப்பை எதிர்கொள்வதும், அவர்களின் முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதும் மற்றொருவருக்கு விரக்தியையும் சோர்வையும் ஏற்படுத்தும். ரொமான்ஸ் காணாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம். திருமணத்தில் ஒருவருக்கொருவர் எடுக்கும் முயற்சிகளைப் அங்கீகரிப்பது மற்றும் பாராட்டுவது மிகவும் முக்கியம்.
எதிர்மறை அணுகுமுறை
எதிர்மறை எண்ணங்கள் ஒரு திருமண உறவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிர்மறையான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் காதல் காணாமல் போகிறது. ஒருவருக்கொருவர் நேர்மறையான அணுகுமுறையும் ஆதரவும் இருந்தால் மட்டுமே ஒரு திருமண வாழ்க்கையில் அன்பும், காதலும் நிறைந்திருக்கும்.
உடல்ரீதியான நெருக்கம் இல்லாமை
திருமண உறவில் உடலுறவு மட்டுமல்ல, சின்ன சின்ன தொடுதலும், உடல் நெருக்கமும் முக்கியம். காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க இதுபோன்ற அன்பின் வெளிப்பாடுகள் அவசியம். துணைவர்கள் ஒருவரையொருவர் தொடுவதையும், கட்டிப்பிடிப்பதையும், முத்தமிடுவதையும் நிறுத்தினால், காதல் திருமணத்திலிருந்து மெதுவாக மறைந்துவிடும்.
வெறுப்புணர்வு
திருமண உறவில் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் விரக்தியாகவும், வெறுப்பாகவும் உணருவது மிகவும் ஆபத்தானது. கடந்த கால அனுபவங்களிலிருந்து வரும் வெறுப்புகளையும் கோபத்தையும் மனதில் சுமப்பது ஒரு திருமணத்தை அழித்து, திருமணத்தில் எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கும். திருமணத்தில் காதல் எப்போதும் நிலைத்திருக்க, பிரச்சினைகள் எழும்போது,உடனுக்குடன் அவற்றைத் தீர்ப்பது அவசியம்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025