Paristamil Navigation Paristamil advert login

துருக்கியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிரான்ஸை சேர்ந்த இளம்பெண்கள் கைது!!

துருக்கியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில்  பிரான்ஸை சேர்ந்த இளம்பெண்கள் கைது!!

1 ஆவணி 2025 வெள்ளி 21:17 | பார்வைகள் : 1912


இரு இளம்பெண்கள், பிரான்ஸில் இருந்து தாய்லாந்து செல்லும் பயணத்தின் பின் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாங்காக் விமான நிலையத்தில் ஒரு தெரியாத நபரால் வழங்கப்பட்ட பூட்டிய இரண்டு பயணப்பெட்டிகளை தங்களுடன் எடுத்துச் செல்ல கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளனர். 

அந்த பெட்டிகளில் போதைமருந்துகள் இருப்பது தெரியாமல் எடுத்துச் சென்றனர் என கூறியுள்ளார்கள். இஸ்தான்புல் இடைநிறுத்தத்தின் போது பெட்டிகளில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதால், இவர்கள் மீது துருக்கியில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இருவரும் பிப்ரவரி மாதத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது துருக்கியில் "போதைமருந்து கடத்தல்" குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 2025 செப்டம்பர் 11ம் திகதி துருக்கி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளனர்.

இவர்கள் மீது 16 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.21 வயதான இப்திசம் (lbtissem) என்ற மாணவிக்கு இந்த பயணத்தை ஏற்பாடு செய்தது, அமியான் (Amiens) சிறையில் உள்ள பழைய நண்பர் எனவும், அவர் சிறையிலிருந்தபடியே கைப்பேசி மூலம் இளம்பெண்களை ஏமாற்றி அனுப்பியதாகவும் வழக்கறிஞர் கூறியுள்ளார். 

மேலும் இது தொடர்பாக பிரான்சின் நீதிமன்றங்களும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், சிறை நிர்வாகம் முறையாக வேலை செய்யவில்லை என்பதற்காக விசாரணை நடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வழக்கறிஞர், இவர்கள் மீது இருக்கும் வழக்கை துருக்கியில் மீளாய்வு செய்ய வேண்டுமெனவும், இவர்கள் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்