Paristamil Navigation Paristamil advert login

Aubervilliers : மூவர் கைது!

Aubervilliers : மூவர் கைது!

2 ஆவணி 2025 சனி 03:55 | பார்வைகள் : 1121


விற்பனைக்கு அனுமதியில்லாத தடைசெய்யப்பட்ட சிகரெட் பெட்டிகளை கடத்திய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Aubervilliers (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 39 தொடக்கம் 54 வயது வரையுள்ள மூவரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 4,489 பெட்டி சிகரெட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 
 

அவை அனைத்தும் பிரான்சில் விற்பனை அனுமதி பெறாத நிறுவனத்தைச் சேர்ந்த சிகரெட் பெட்டிகள் என தெரிவிக்கப்படுகிறது. 


கடந்த திங்கட்கிழமை Rue Sadi Carnot வீதியில் வைத்து சட்டவிரோத சிகரெட் விற்பனை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், அதன் தொடர்ச்சியாகவே இவர்கள் மூவரையும் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்