அதிக நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்த ட்ரம்ப்... முழுமையான தகவல்

2 ஆவணி 2025 சனி 07:30 | பார்வைகள் : 200
ஜனாதிபதி ட்ரம்பின் சமீபத்திய வரி விதிப்புகளால் வெள்ளிக்கிழமை உலகளாவிய பங்குச் சந்தைகளில் சரிவை ஏற்படுத்தியது, இதனால் பல நாடுகளும் நிறுவனங்களும் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களை எட்டுவதற்கான வழிகளைத் தேடத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
1930 களின் முற்பகுதியிலிருந்த மிக உயர்ந்த வரி விகிதங்களுடன் உலகப் பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் திட்டங்களை ட்ரம்ப் முன்னெடுத்துச் செல்ல இருப்பதாகவே கூறப்படுகிறது.
39% வரிகளால் திகைத்துப் போன சுவிட்சர்லாந்து, மேலும் பேச்சுவார்த்தைகளை நாடியுள்ளது, அதே போல் இந்தியா மீது 25% வரி விகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய வரிகளில் கனடாவிலிருந்து வரும் பல பொருட்களுக்கு 35%, பிரேசிலுக்கு 50%, தைவானுக்கு 20% வரி விதிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் புதிய வரிகள் இன்னும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளன, பல விவரங்கள் தெளிவாக இல்லை என்றே கூறப்படுகிறது. மேலும், அதிக வரிகளால் பாதிக்கப்பட்ட நாடுகள், குறைந்த விகிதத்தைப் பெறும் நம்பிக்கையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதாகக் கூறின.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்துவதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் வர்த்தக அமைச்சர் பார்க்ஸ் டௌ தெரிவிக்கையில், தங்கள் நாடு எதிர்கொள்ளும் 30% அமெரிக்க வரியிலிருந்து வேலைகள் மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாக்க நடைமுறை தலையீடுகளை நாடுவதாகக் கூறினார்.
இதனிடையே, 36 சதவீதத்தில் இருந்து 19% ஆகக் குறைந்திருப்பது தனது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும் என தாய்லாந்தின் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கனடா மீது 25 சதவீத வரியில் இருந்து தற்போது 35 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.
அமெரிக்காவிற்குள் சட்டவிரோத போதைப்பொருள் வருகையைத் தடுப்பதில் கனடா ஒத்துழைக்கத் தவறிவிட்டது என்றே ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியா மீது 25% வரி விதித்ததை அடுத்து, அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது, இந்த வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 40 பில்லியன் டொலர்கள் வரையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றே கூறப்படுகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025