Paristamil Navigation Paristamil advert login

30 ஆண்டுகளாக உறைந்திருந்த கருவில் இருந்து இரட்டைக் குழந்தைகள்

30 ஆண்டுகளாக உறைந்திருந்த கருவில் இருந்து இரட்டைக் குழந்தைகள்

2 ஆவணி 2025 சனி 08:30 | பார்வைகள் : 114


அமெரிக்காவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டு, அதி-குளிரூட்டப்பட்ட நிலையில் உறைந்திருந்த கருவில் இருந்து, தற்போது ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகள் பிறந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளன.

 

அமெரிக்காவின் ஒரேగాன் மாகாணத்தைச் சேர்ந்த ரேச்சல் மற்றும் பிலிப் ரிட்ஜ்வே தம்பதியினருக்கு, அக்டோபர் 31, 2022 அன்று லிடியா (Lydia) மற்றும் டிமோத்தி (Timothy )எனப் பெயரிடப்பட்ட இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

 

இதில் திகைப்பூட்டும் உண்மை என்னவென்றால், இந்தக் குழந்தைகளின் கருக்கள் ஏப்ரல் 22, 1992 அன்று உருவாக்கப்பட்டு உறைய வைக்கப்பட்டிருந்தன.

 

அதாவது, குழந்தைகளின் தந்தை பிலிப் ரிட்ஜ்வேக்கே அப்போது வெறும் 5 வயதுதான். டென்னசி மாகாணத்தில் உள்ள தேசிய கரு கொடை மையத்தில் (NEDC), அடையாளம் தெரியாத ஒரு தம்பதியினர் தானமாக வழங்கிய கருக்கள் இவை.

 

30 ஆண்டுகளாக உறக்க நிலையில் இருந்த இந்த அதிசயக் கருக்களை, ரிட்ஜ்வே தம்பதியினர் தத்தெடுத்து, ரேச்சலின் கருப்பையில் செலுத்தினர்.

 

இதன் விளைவாக, இன்று உலகின் மிகப் பழைமையான கருவில் இருந்து பிறந்த குழந்தைகள் என்ற சாதனையை லிடியாவும், டிமோத்தியும் படைத்துள்ளனர்.

 

 

இது குறித்து பேசிய தாய் ரேச்சல் ரிட்ஜ்வே, இது எங்களின் சிற்றறிவுக்கு எட்டாத ஒரு விஷயம். 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கருவில் இருந்து இன்று எங்கள் குழந்தைகள் பிறந்துள்ளார்கள் என்பதை நம்பவே முடியவில்லை.

 

இது ஒருவகையில் எங்கள் வரலாற்றின் ஒரு சிறிய துண்டு எங்களுடன் இருப்பது போல உள்ளது, என்றார்.

 

தந்தை பிலிப் கூறுகையில், யாராலும் தேர்ந்தெடுக்கப்படாமல், நீண்ட காலமாக காத்திருந்த கருக்களை நாங்கள் தத்தெடுக்க விரும்பினோம். அவர்கள் எங்கள் குழந்தைகளாக வந்திருப்பது கடவுளின் செயல், என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

 

அதேவேளை இதற்கு முன்பு, 27 ஆண்டுகள் உறைந்திருந்த கருவில் இருந்து 2020-ல் பிறந்த மோலி கிப்சன் என்ற குழந்தைதான் இந்தச் சாதனையை வைத்திருந்தது.

 

 

இந்நிலையில் தற்போது, 30 ஆண்டுகள், 6 மாதங்கள் காத்திருந்து பிறந்த இந்த இரட்டையர்கள், அந்தச் சாதனையை முறியடித்துள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்