இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 42 பேர் காயம்

2 ஆவணி 2025 சனி 08:30 | பார்வைகள் : 214
கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 42 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெரணியகலையில் இருந்து அவிசாவளை கைத்தொழில் பேட்டைக்கு பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025