மெஸ்ஸி Vs தோனி, கோலி...! டிசம்பர் 14-ல் நிகழவிருக்கும் வரலாற்றுச் சம்பவம்

2 ஆவணி 2025 சனி 10:30 | பார்வைகள் : 119
மும்பை வான்கடே மைதானத்தில் தோனி, கோலி மற்றும் பிற கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் கால்பந்தாட்ட ஜனம்பவான் லியோனல் மெஸ்ஸி விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அர்ஜென்டினாவின் கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி, இந்திய கிரிக்கெட் லெஜெண்ட்ஸ் எம்.எஸ். தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோருடன் விளையாடப்போகும் அதிரடியான நிகழ்வு டிசம்பர் 14-ம் திகதி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தகவலை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.
மெஸ்ஸி இந்தியா சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த 7 பேர் கொண்ட கிரிக்கெட் எக்ஸிபிஷன் போட்டியில் பங்கேற்கிறார்.
இதற்காக மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA) மைதானத்தை முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2008ல் கொல்கத்தாவில் நடந்த அர்ஜென்டினா Vs வெனிசுவேலா friendly போட்டியிலேயே மெஸ்ஸி இந்தியா வந்திருந்தார். அதன் பின்னர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் இந்தியா வருகிறார்.
இத்துடன் டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கும் மெஸ்ஸி செல்ல உள்ளார். இது இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தருணமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025