Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா; நல்ல நடவடிக்கை என டிரம்ப் வரவேற்பு

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா; நல்ல நடவடிக்கை என டிரம்ப் வரவேற்பு

2 ஆவணி 2025 சனி 12:09 | பார்வைகள் : 163


ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தி இருப்பது நல்ல நடவடிக்கை'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தினால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. இதை சமாளிக்க தள்ளுபடி விலையில், அந்நாடு கச்சா எண்ணெயை விற்பனை செய்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய நம் நாடு, குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கியது.

இது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு பிடிக்கவில்லை. இதனால் கடுப்பான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆக., 1 முதல், இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாகவும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், அபராதம் விதிப்பதாகவும் அறிவித்தார். மேலும், இந்தியா - ரஷ்யா பொருளாதாரம் செத்து போய்விட்டதாகக் கடுமையாக விமர்சித்தார்.

தற்போது, விலைச்சலுகை கிடைக்காதது, அமெரிக்க வரி விதிப்பு ஆகிய காரணங்களால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது:

இந்தியா இனி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அப்படித்தான் நான் கேள்விப்பட்டேன். அது சரியா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அது ஒரு நல்ல நடவடிக்கை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்' என்றார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்