பதின்மூன்றாவது காவல்துறை வீரர் தற்கொலை!!
2 ஆவணி 2025 சனி 12:32 | பார்வைகள் : 1350
தேசிய காவல்துறையில் பணிபுரியும் வீரர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இவ்வருடத்தில் பதிவாகும் 13 ஆவது காவல்துறையினர் தற்கொலை இதுவாகும்.
ஓகஸ்ட் 1, நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் பிரான்சின் வடக்குப் பகுதியான Dunkerque இல் இடம்பெற்றுள்ளது. குற்றவியல் பிரிவில் பணிபுரியும் 30 வயதுடைய Sébastien R. எனும் காவல்துறை வீரரே தற்கொலை செய்துள்ளார். அவரது வீட்டில் வைத்து சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். சடலம் மீடக்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் பதிவாகும் 13 ஆவது காவல்துறையினரின் தற்கொலை இதுவாகும். தற்கொலை எண்ணம் கொண்ட காவல்துறையினருக்காக பிரத்யேகமாக அரசாங்கம் 3114 எனும் அவசர இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan