Paristamil Navigation Paristamil advert login

பணமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு சிக்கல்; டில்லி நீதிமன்றம் நோட்டீஸ்!

பணமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு சிக்கல்; டில்லி நீதிமன்றம் நோட்டீஸ்!

3 ஆவணி 2025 ஞாயிறு 09:34 | பார்வைகள் : 135


பணமோசடி வழக்கில் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி நேரில் ஆஜர் ஆகுமாறு

காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு டில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை, டில்லி உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகனும், காங்கிரஸ் எம்.பி., பிரியாங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா உள்பட 10 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், அவருக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்பிலான 43 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த வழக்கை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள ராபர்ட் வதேராவுக்கு வரும் ஆகஸ்ட் 28ம் தேதி நேரில் ஆஜர் ஆகுமாறு டில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அவர் அன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும் என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்