செப்பு கேபிள் திருட்டு: நோந்தில் மூவர் கைது!

2 ஆவணி 2025 சனி 20:38 | பார்வைகள் : 353
நோந்த் (Nantes) பகுதியில், மூன்று பேர் Orange தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கேபிள்களை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கார் ஒன்றில் சுமார் இரண்டு டன் செப்புக் கேபிள்களுடன் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இந்த குழு, மொத்தமாக 700,000 யூரோ மதிப்புள்ள 21 திருட்டுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் திட்டமிட்டு, கேபிளின் ஒரு முனையை வெட்டி, அதை காரில் கட்டி இழுத்து, பல கிலோமீட்டர்கள் நீளமான கேபிள்களை எடுத்துச் செல்கிறார்கள்.
திருடிய செமப்பை அவர்கள் பெரும்பாலும் உலோகக் குப்பை வியாபாரிகள் மூலமாக விற்றுள்ளனர். Orange நிறுவனத்தின்படி, கடந்த 3 ஆண்டுகளில் செப்பு திருட்டுகள் 8 மடங்கு அதிகரித்துள்ளன.
சில கேபிள்களில் அடையாளங்கள் அகற்றப்பட்டிருந்தாலும், அவை கண்டுபிடிக்கப்படுகின்றன. தற்போது ஒருவரை காவலில் வைத்திருப்பதாகவும், மற்ற இருவர் நீதிமன்ற கண்காணிப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025