விலங்குகளை தவறாக நடத்தியதால் Seine-et-Marneஇல் உள்ள பண்ணை பறிமுதல்!!
2 ஆவணி 2025 சனி 21:55 | பார்வைகள் : 7993
2020ல் 17 வயதில் Théo Collin Grisy-Suisnes பகுதியில் Théo Sheep and Co என்ற கல்வி நலச்சாலையை தொடங்கினார்.
அவர் COVID-19 காலத்தில் 1000க்கும் மேற்பட்ட கோழிகளை மீட்டதற்காக பாராட்டப்பட்டாலும், அவரது பண்ணையில் விலங்குகள் தக்க பராமரிப்பின்றி இருந்ததாக புகார்கள் வந்துள்ளன. Stéphane Lamart என்ற அமைப்பின் புகாரின் பேரில், பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் பல விலங்குகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
விலங்குகள் போதிய உணவின்றியும் தண்ணீருமின்றியும் மற்றும் மருத்துவ பராமரிப்பின்றியும் வைக்கப்பட்டதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. ஆரம்பத்தில் நீதிமன்றம் Théo-விற்கு ஒரு எச்சரிக்கை வழங்கியுள்ளார். ஆனால், Stéphane Lamart அமைப்பின் முறையீட்டுக்குப் பிறகு, மேன்முறையீட்டு நீதிமன்றம் Théo Sheep and Co அமைப்பை குற்றவாளி என தீர்ப்பளித்து, விலங்குகளை நிரந்தரமாக பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற செலவுக்காக €1,000 (மொத்தம் €3,115) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் Stéphane Lamart அமைப்பின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு, தற்போது புதிய குடும்பங்களும் தத்தெடுக்கப்படவிருக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan