நாடுகடத்தப்பட்ட நால்வர்! - Hauts-de-Seine காவல்துறையினர் அதிரடி!!
.jpg)
3 ஆவணி 2025 ஞாயிறு 06:20 | பார்வைகள் : 2341
Hauts-de-Seine மாவட்டத்தில் வசிக்கும் நால்வர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தயேஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டும், இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனை கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற பணிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வாரம் அவர்கள் பிரான்சில் இருந்து அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த Fahem என்பவராவார். அவர் ஏற்கனவே பிரான்சில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவராவார்.
மொராக்கோ நாட்டைச் சேர்ந்த Assou, சிரியாவைச் சேர்ந்த Al Mansour, மொராக்கோவைச் சேர்ந்த Akroud ஆகிய நால்வருமே வெளியேற்றப்பட்டுள்ளனர்.