இஸ்ரேலின் பாதுகாப்புக்குத் துன்புறுத்தல் - பாலஸ்தீன அரசை எதிர்த்த நெதன்யாகு

3 ஆவணி 2025 ஞாயிறு 06:32 | பார்வைகள் : 222
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இஸ்ரேலிய நிபந்தனையை நிராகரித்துள்ள ஹமாஸ், ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீன நாடு நிறுவப்படும் வரை ஆயுதங்களை கைவிடப் போவதில்லை என தெரிவித்துள்ளது.
எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தம் செய்த மறைமுக போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெயாகியுள்ளது.
எந்தவொரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும் ஹமாஸ் தமது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்துகிறது.
இருப்பினும், முழு இறையாண்மை அடையும் வரை ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான உரிமையை ஹமாஸ் தக்க வைத்துக் கொள்ளும் என்று கூறுகிறது.
60 நாள் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகள் முடங்கிப் போயுள்ளன.
இந்தநிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாலஸ்தீன அரசு என்ற யோசனையை நிராகரித்து, அது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறியுள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025