உக்ரைன் ட்ரோன் தாக்குதல் - வெடித்து சிதறிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

3 ஆவணி 2025 ஞாயிறு 11:25 | பார்வைகள் : 254
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ராணுவ தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்று இரவு உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யா முழுவதும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ரோஸ்டோவ் பகுதியில், ஒரு தொழில்துறை தளத்தில் ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பாதுகாப்பு காவலர் கொல்லப்பட்டார்.
மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே கிட்டத்தட்ட 180 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒன்பது மணி நேரத் தாக்குதலின் போது, 112 உக்ரைன் ட்ரோன்களை வானிலே பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தின என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் மக்கள் பலர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025