பாகிஸ்தானில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் 30 பேர் படுகாயம்

3 ஆவணி 2025 ஞாயிறு 12:00 | பார்வைகள் : 194
பாகிஸ்தானில் இருந்து ராவல்பிண்டிக்கு புறப்பட்ட அதிகவேக ரயிலொன்று தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு குறித்த ரயிலானது பாகிஸ்தானின் லாகூரிலிருந்து ராவல்பிண்டிக்கு புறப்பட்டுள்ளது.
சுமார் 100 இற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயிலில் பயணித்துள்ளனர்.
சரியாக ஷேகாபுரா ரயில் நிலையத்துக்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது குறித்த ரயிலின் பத்து பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டுள்ளன.
இவ் விபத்தில் சுமார் 30 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்த அதிகாரிகள் குறித்த இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எதனால் இச் சம்பவத் நிகழ்ந்தது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025