Paristamil Navigation Paristamil advert login

Gravelines கடலில் காணாமல் போன 10 வயது சிறுவன்!!

Gravelines கடலில் காணாமல் போன 10 வயது சிறுவன்!!

3 ஆவணி 2025 ஞாயிறு 13:30 | பார்வைகள் : 435


ஒரு 10 வயது சிறுவன் கடலில் காணாமல் போன சம்பவத்தில், அவரை தேடும் நடவடிக்கைகள் சனிக்கிழமை மாலை நிறுத்தப்பட்டதாக கடற்படை மாவட்ட ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில், Gravelines (Nord) கடற்கரையில் மூன்று சிறுவர்கள் நீச்சலுக்கு போனபோது சிக்கலில் சிக்கியுள்ளனர்.

இவர்களில் இருவர், 10 மற்றும் 13 வயதுடையவர்கள், தாங்களே கடற்கரைக்குத் திரும்பியதாகவும், சிறு காயங்களுடன் னுரமெநசஙரந மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தீயணைப்புப் படைகள் தெரிவித்தன.

மூன்றாவது சிறுவன் காணாமற் போயுள்ளான்.

காணாமல் போன மூன்றாவது சிறுவனைத் தேடுவதற்காக:

தேடுதல் வான் படையின் உலங்குவானூர்தி
வட பகுதியின் SDIS கடல்தேடல் குழு
SNSM கடலுக்கான மீட்புக் கப்பல்கள்

ஆகியவை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டன.

இருப்பினும், மாலை ஆரம்பத்தில் தேடல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு எச்சரிக்கைகள் மீண்டும் நினைவுபடுத்தப்படுகின்றன

இந்தச் சம்பவம், பிரான்சில் சமீப காலமாக உயர்வடைந்த நீராடல் விபத்துகள் தொடர்பான கவலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.

அதிகாரிகள், பொதுமக்கள் தடை செய்யப்பட்ட நீச்சல் பகுதிகளைத் தவிர்த்து, பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்