மீண்டும் இணையும் அஜித் அனிருத் கூட்டணி !
3 ஆவணி 2025 ஞாயிறு 14:06 | பார்வைகள் : 3468
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்குமார் கூட்டணியில் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என்பதை ஆதிக் சமீபத்தில் உறுதி செய்தார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்பவர் தயாரிக்கிறார்.
தற்போது இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் மூலம் ஆதிக், அனிருத் கூட்டணி முதல்முறையாக இணைகின்றனர். அஜித், அனிருத் கூட்டணி ‛வேதாளம், விவேகம், விடாமுயற்சி' ஆகிய படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan