CAF : மோசடிகளை கட்டுப்படுத்த புதிய ஏற்பாடு! - மின்னஞ்சல் குறித்து எச்சரிக்கை!!
3 ஆவணி 2025 ஞாயிறு 16:54 | பார்வைகள் : 3088
CAF கொடுப்பனவுகளில் ஏற்படும் மோசடிகளை தடுப்பதற்கு புதிய சில திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைகள் மேற்கொள்ளுவதற்காக முகவர்கள் சிலர் உங்களது வீடுகளுக்கு வருகை தரக்கூடும் எனவும், அதேவேளை, மின்னஞ்சல் ஒன்றும் உறுதிப்படுத்தலுக்காக அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் 33 மில்லியன் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்ற ஆண்டில் 47,000 மோசடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதை அடுத்து அதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆவணங்களை பரிசோதிப்பதற்காக முகவர்கள் வீடுகளுக்கு வருகை தரக்கூடும். இதற்காக ஒவ்வொரு நாளும் 700 முகவர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, தரவுகளை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல்களும் அனுப்பப்படும். அவற்றை ‘மோசடி’ மின்னஞ்சல் என கடக்கவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan