Paristamil Navigation Paristamil advert login

முதல்வரை சந்தித்ததில் அரசியல் இல்லை; மவுனம் கலைத்தார் ஓபிஎஸ்

முதல்வரை சந்தித்ததில் அரசியல் இல்லை; மவுனம் கலைத்தார் ஓபிஎஸ்

4 ஆவணி 2025 திங்கள் 06:07 | பார்வைகள் : 141


முதல்வரை சந்தித்ததில் அரசியல் இல்லை. திமுகவில் நான் இணையப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் இல்லத்திற்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல். முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த வித அரசியலும் இடம்பெறவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய முதல்வரிடம் நேரில் நலம் விசாரித்தேன்.

முதல்வரின் மூத்த சகோதரர் மு.க. முத்து மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்க சென்றேன்.நான் திமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், திமுகவில் இணையப் போவதாகவும் வதந்தி பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்; இதில் எள்ளளவும் உண்மையில்லை. முதல்வர் உடனான சந்திப்பை வைத்து என்னை திமுகவின் பி டீம் என பேசுகின்றனர்.

எங்கள் நோக்கம்

முதல்வரை நான் சந்தித்ததை வைத்து அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கின்றனர். முதல்வர் உடனான சந்திப்பு தமிழ் பண்பாட்டின் வெளிப்பாடு. இந்த சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், அதற்கான நடவடிக்கைகளை உறுதியாக எடுப்போம். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்