கண் பார்வையை ஈசியாக மேம்படுத்த உதவும் 5 எளிதான உணவுகள்
14 புரட்டாசி 2021 செவ்வாய் 16:16 | பார்வைகள் : 9233
இன்றைய நவீன வாழ்வில் கண் ஆரோக்கியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
பல ஆண்டுகளாக, உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களுக்கு கண் ஆரோக்கியம் என்பது மோசமான அளவில் இருப்பது பெரும் கவலையை அளிக்கிறது. தொலைக்காட்சி, மொபைல் மற்றும் கேஜெட்களின் அதிகரித்த பயன்பாட்டுடன், இன்று மோசமான கண்பார்வை ஒரு பொதுவான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, “உலகெங்கிலும் உள்ள 1 பில்லியன் மக்களுக்கு தடுக்கக்கூடிய பார்வைக் குறைபாடு அல்லது இன்னும் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று-- இவை இரண்டு வேறுபாடுகள் மட்டும்தான் உள்ளன. கண்பார்வை குறைப்பாடு தினசரி மற்றும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பெரிய மற்றும் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தும் தனிப்பட்ட நடவடிக்கைகள், சமூகத்துடன் தொடர்புகொள்வது, பள்ளி மற்றும் பணி வாய்ப்புகள் மற்றும் பொது சேவைகளை அணுகும் திறன் ஆகிய அனைத்திலும் தொடர்புடையது”, என்கிறது WHO.
நமக்குள் இருந்து ஊட்டமளிப்பதைத் தவிர, சில அத்தியாவசிய வைட்டமின்கள் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. அமெரிக்க ஆப்டோமெட்ரிக் அசோசியேஷனின் கூற்றுப்படி, வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு (macular degeneration) உள்ளிட்ட சில கண் நோய்களின் அபாயங்களைக் குறைப்பதாக அறியப்படுகிறது. இதனால்தான் சிறந்த கண் ஆரோக்கியத்திற்காக சிட்ரிக் பழங்கள், கொட்டை வகைகள், விதைகள், மீன் போன்றவற்றை நம் அன்றாட உணவில் சேர்ப்பதில் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நம் பெற்றோர் நம்மை ஏன் கீரையை சாப்பிட கட்டாயப்படுத்தினார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? கீரை வகைகள் மற்றும் காய்கறிகளில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், நம் கண்கள் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயடெடிக்ஸ், கீரைகள் லுடீன், ஜீயாக்சாண்டின், வைட்டமின்கள் மற்றும் பீட்டா-கரோட்டின் நிறைந்த ஆதாரமாக இருக்கிறது என்று பரிந்துரைக்கிறது. அவை புற ஊதா கதிர்கள் மற்றும் கதிர் வீச்சிலிருந்து நம் கண்களைப் பாதுகாக்கின்றன.
நீரேற்றத்தின் முக்கியத்துவத்திற்கு நமக்கு தனி அறிமுகம் என்பது தேவையில்லை. நம் கண் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் நீரிழப்பைத் தவிர்ப்பதற்கு ஒருவர் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
பீவர் டாம் கண் ஆய்வின் படி, உடல் பருமன் நம் கண் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் மற்றும் கண்களுக்குள் அழுத்தத்தை அதிகரிக்கலாம் என்று கணித்துள்ளது. எனவே, ஆரோக்கியமான வாழ்விற்கு உடல் எடையை நிர்வகிக்க உதவும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, புகைபிடித்தல் கண்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது நாளடைவில் கண்பார்வை இழப்பை கூட ஏற்படுத்தும். தவிர, புகைப்பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில், புகைப்பிடிப்பவர்களுக்கு கண்புரை போன்ற பிரச்சனைகள் ஏற்பட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.