மெற்றோ : திருத்தப்பணிகளுக்காக மூடப்படுகிறது மெற்றோ!!

4 ஆவணி 2025 திங்கள் 08:00 | பார்வைகள் : 645
இன்று ஓகஸ்ட் 4, திங்கட்கிழமை முதல் ஓகஸ்ட் 8 வெள்ளிக்கிழமை வரை 14 ஆம் இலக்க மெற்றோ முழுமையாக மூடப்படுகிறது.
திருத்தப்பணிகள் மற்றும் புதிய கட்டுப்பாட்டு முறையை பரிசோதிக்கும் காரணங்களினால் இந்த தடை ஏற்பட உள்ளது. Saint-Denis- Pleyel நிலையம் முதல் Aeroport d'Orly நிலையம் வரையான 21 நிலையங்களிலும் 14 ஆம் இலக்க மெற்றோ இயக்கப்பட மாட்டாது.
குறித்த நிலையங்களிடையே பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தானியங்கி முறையிலான 14 ஆம் இலக்க மெற்றோ சேவைகள் சீராக இயங்க புதிய சமிக்ஞை கட்டுப்பாடுகள் பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட உள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025