Paristamil Navigation Paristamil advert login

அதிக வெப்பமான காலநிலை பிரான்சில் திரும்புகின்றது! (கிழமை வாரியாக)

அதிக வெப்பமான காலநிலை பிரான்சில் திரும்புகின்றது!  (கிழமை வாரியாக)

4 ஆவணி 2025 திங்கள் 10:43 | பார்வைகள் : 668


நேற்று முடிந்த வார இறுதி காலநிலைக்கு பின், மேகமூட்டமாகவும் இருந்த மற்றும் சில மழை மூட்டமாகவும் இருந்த வானிலை, இன்று திங்கட்கிழமை முதல் வெப்பமான  கோடை வெப்பம் திரும்பி வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை: வெப்ப நிலைகள் 33°C வரை உயர்ந்துள்ள போதிலும், 21°C குறைந்த நிலையான குளிர் வெப்பம், பிரெஸ்ட் (rest - Finistère) போன்ற இடங்களில் காணப்படும்.

செவ்வாய்க்கிழமை: பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் இருக்கும். வடக்கு பகுதியில் வெப்பம் 25°C  இற்கும் குறைவாக இருக்கும், ஆனால் தெற்கு பகுதியில், வெப்பம் 25°C இற்கும் மேல் இருக்கும்.

புதன்கிழமை: மேகங்கள் திரும்ப வந்து, சில இடங்களில் அதிக வெப்பம் 32°C வரை ஆகும். Cherbourg (Manche)
அல்லது அதன் தொடர்பான இடங்களில் 20°C குறைவான வெப்பம் காணப்படும்.

வியாழக்கிழமை: பிரான்சின் பெரும்பாலான இடங்களில் வெப்ப நிலை 36°C ஆகவும், லியோனில் 34°C வரையான வெப்பமும் காணப்படும்.

வெள்ளிக்கிழமை: வெயில் தொடர்ந்து நிலவும், வெப்ப நிலைகள் 36°C ஆகவும், இரவு கால வெப்பம் 21°C வரையாகவும் இருக்கும்.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை: கோடை வெப்பம் தொடரும், சிறிய காற்று வீசும்.

இந்த நேரத்தில், வெப்பக் காலநிலை, கடந்த வார இறுதியில் தொடங்கிய கொதிக்கும் வெப்பம் கொண்ட காலநிலையாக திடீரென அதிகரிக்கும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்