Paristamil Navigation Paristamil advert login

குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

11 புரட்டாசி 2021 சனி 15:25 | பார்வைகள் : 9322


 உலகில் விலை உயர்ந்த நறுமண பொருட்களில் ஒன்றாக குங்குமப்பூ கருதப்படுகிறது. ஒரு பவுண்டு (454 கிராம்) குங்குமப்பூ உற்பத்தி செய்வதற்கு 750 குங்குமப்பூ இதழ்கள் தேவைப்படுகிறது. அதனால் அதன் விலையும் அதிகமாக இருக்கிறது. குங்குமப்பூ பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டது. ஆஸ்துமா, இருமல், தொண்டை வலி, தூக்கமின்மை, புற்றுநோய், தமனி பாதிப்பு, வாந்தி, வாயு தொந்தரவு, மனச்சோர்வு, பதற்றம், அல்மைசர் போன்ற நோய் பாதிப்புகளுக்கு மருந்தாக குங்குமப்பூ விளங்குகிறது. மாதவிடாய் பாதிப்புகளுக்கு நிவாரணியாகவும் விளங்குகிறது.

 
சுடுநீரில் ஐந்து குங்குமப்பூ பிசிறுகளை போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். குங்குமப்பூவுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உண்டு. மனநிலையை மாற்றவும் செய்யும்.
 
 சரும பளபளப்புக்கும் குங்குமப்பூ உதவும். கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தொடர்ந்து குங்குமப்பூ குடிநீர் பருகி வந்தால் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
 
ஆனாலும் குங்குமப்பூவை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அப்படி உட்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும். தலைசுற்றல், வயிற்றுப்போக்கு, வாந்தி, கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரும். ஒரே நேரத்தில் 12 முதல் 20 கிராம் குங்குமப்பூ சாப்பிட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
 
குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்களும், இதய நோயாளிகளும் குங்குமப்பூவை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்களும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அனைத்து தரப்பினரும் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று குங்குமப்பூவை பயன்படுத்த வேண்டும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்