Paristamil Navigation Paristamil advert login

காஷ்மீரில் 4வது நாளாக தொடரும் ஆப்பரேஷன் அகல்: 4வது நாளில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 4வது நாளாக தொடரும் ஆப்பரேஷன் அகல்: 4வது நாளில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

5 ஆவணி 2025 செவ்வாய் 04:07 | பார்வைகள் : 102


காஷ்மீரில் அகல் வனப்பகுதியில் 4வது நாளாக, நடந்த ராணுவ நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுவரை பயங்கரவாதிகள் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. நம் ராணுவத்தினருடன், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், காஷ்மீர் போலீசார் இணைந்து, ஆப்பரேஷன் அகல் என்ற பெயரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 04) 4வது நாளாக, ராணுவ தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். பின்னர் தொடர்ந்து நடந்த தீவிர தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். 4வது நாளில் மொத்த பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும், ராணுவ வீரர்கள் 4 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது நடந்து வரும் ராணுவ நடவடிக்கையில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்