Paristamil Navigation Paristamil advert login

விமானத்தில் மோதிய பறவை! - அவசர தரையிறக்கம்!!

விமானத்தில் மோதிய பறவை! - அவசர தரையிறக்கம்!!

4 ஆவணி 2025 திங்கள் 13:00 | பார்வைகள் : 500


பரிசின் ஓர்லி விமான நிலையம் நோக்கி பறந்த விமானம் ஒன்றின் மீது பறவை ஒன்று மோதியதை அடுத்து, விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டது.

ஓகஸ்ட் 3, நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது. Madrid Barajas சர்வதேச விமான நிலையத்துல் இருந்து புறப்பட்ட Iberia A321 விமானத்தின் மீது இராட்சத பறவை ஒன்று மோதியுள்ளது. விமானத்தின் முன்பகுதி பாரிய சத்தத்துடன் உடைந்து நொருங்கியது.

இந்த பரபரப்பான சம்பவத்தை அடுத்து விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டது.

உயிராபத்துக்கள் எதுவும் இல்லை என்றபோதும், பெரும் அச்சத்தை ஏற்படுதியுள்ளது.

விமானம் புறப்பட்டு ஓர்லி விமான நிலையம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தனிலையில், 50 ஆவது நிமிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்