Paristamil Navigation Paristamil advert login

Bouygues Telecom கடையில் மீண்டும் 60 தொலைபேசிகள் கொள்ளை!!

Bouygues Telecom கடையில் மீண்டும் 60 தொலைபேசிகள் கொள்ளை!!

4 ஆவணி 2025 திங்கள் 14:55 | பார்வைகள் : 682


சனிக்கிழமை மாலை கடை மூடும் நேரத்தில், பிளின்-சூர்-சேன் (Flins-sur-Seine) பகுதியில் உள்ள Bouygues Telecom கடையில் இரண்டு நபர்கள் தொலைபேசிகளை கொள்ளையடித்துள்ளனர். 

இரண்டு நபர்களும் முகத்தை மறைத்துக்கொண்டு, கரும்பூச்சி ஸ்ப்ரே (gazeuse lacrymogène)  கொண்டு ஊழியர்களை மிரட்டி, கைப்பேசி களஞ்சியத்தை திறக்க வற்புறுத்தியுள்ளனர். அவர்கள் சாம்சங் (Samsung) மற்றும் ஆப்பிள் (Apple) பிராண்டுகள் உட்பட சுமார் 60 ஸ்மார்ட்போன்களையும், பல உதிரிப்பாகங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த இருவரும் Fiat 500 காரில் தப்பிச் சென்றுள்ளனர்; அதன் பதிவு எண் போலியானதாக இருக்கிறது. அவர்கள் இதுவரை காவல் துறையினரால் கைது செய்யப்படவில்லை. 

இதே கடையில் கடந்த ஜூன் மாதத்திலும் ஒரே மாதிரியான கொள்ளை நடந்துள்ளது. மொன்டெசான் (Montesson) பகுதியில் உள்ள மற்றொரு வணிக வளாகத்திலும் பிப்ரவரியில் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்