மீன் வடை

4 ஆவணி 2025 திங்கள் 16:48 | பார்வைகள் : 112
ஈவினிங் நேரத்துல டீ குடிக்கும் போது கடலைமாவு வடை சாப்பிட்டு போர் அடுச்சுருச்சா, வித்தியாசமான நான்வெஜ்ல எதுவாது சாப்பிடனும்னு நினைச்சா மீனை வச்சு வடை செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாமா.
தேவையான பொருட்கள்;-மீன், கடலைமாவு, எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பெருஞ்சீரகம், முட்டை,
மீன் வடை செய்வதற்கு பிடித்தமான முள் குறைவாக இருக்கும் ஏதாவது ஒரு மீனை எடுத்து கொண்டு சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் மீனை வேகவைப்பதற்கு ஏற்றார்போல் பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி மீனை போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். வேகவைத்த பிறகு தனியாக எடுத்து அதில் இருக்கும் முள்ளை பிரித்தெடுத்து சதையினை மட்டும் தனியாக வைக்கவும்.
பின்பு அதில் மிளகாய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி போட்டு விட்டு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பெருஞ்சீரகம், தேவையான அளவு உப்பு, மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
இதன்பின் கொஞ்சம் கடலைமாவு சேர்த்து, பிசைந்த பிறகு வடை போட்டு தட்டி விட்டு, வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு ஒவ்வொன்றாக போட்டு எடுத்தால் சூடான வடை தயாராகிவிடும்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025