அஜித் ஏ ஆர் முருகதாஸ் சந்திப்பின் பின்னணி என்ன ?

4 ஆவணி 2025 திங்கள் 16:48 | பார்வைகள் : 156
நடிகர் அஜித் குமார், தான் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய சில இயக்குநர்களை சந்தித்துள்ளது, கோலிவுட் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், அஜித் தனது நீண்டநாள் நண்பர்களான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, அனிருத்தும் உடனிருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த புகைப்படத்தை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அதில் நண்பர்கள் காலத்திற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல, அது நேற்று இன்று நாளை மற்றும் எப்போதும் உள்ளது. நண்பர்கள் நாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார் .
மேலும் அஜித்துடன் இயக்குனர்கள் இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025