திருமண வாழ்க்கையில் காதல் ஏன் நீண்ட காலம் நீடிக்கிறது?

4 ஆவணி 2025 திங்கள் 16:48 | பார்வைகள் : 124
அமைதியான சமையலறையில் எதிரொலிக்கும் சிரிப்பின் சத்தம் அல்லது தீவிரமான உரையாடலின் போது வெடிக்கும் சிரிப்பு போன்றவைதான் காதல் உணர்வை எளிதாக்குகிறது. அடிக்கடி ஒன்றாகச் சிரிக்கும் தம்பதிகள், தங்கள் உறவுகளில் வித்தியாசமான ஒன்றைச் செய்கிறார்கள். அவர்கள் இடையேயான பிணைப்பு ஈர்ப்பின் காரணமாக மட்டும் கட்டமைக்கப்படவில்லை; அது மகிழ்ச்சி, விளையாட்டு மற்றும் உணர்ச்சிப்பூர்வமாக பகிரப்பட்ட உணர்வின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் காதல் ஏன் நீண்ட காலம் நீடிக்கிறது? ஏன் இலகுவாக உணர வைக்கிறது? ஏன் ஆழமாக இருக்கிறது? காரணம் இதோ..
பதட்டமான சூழ்நிலைகளைத் தவிர்க்கிறார்கள் : ஒவ்வொரு கருத்து வேறுபாடும் வாக்குவாதமாக மாறக்கூடாது என்பதை இந்த தம்பதிகள் புரிந்து வைத்துள்ளார்கள். பதற்றம் அதிகரிக்கும் போது, கிண்டலும் கேலியும் நகைச்சுவை பேச்சுமாக அதை கடந்துவிடுகிறார்கள். அதற்காக அவர்கள் ஆழமான உரையாடல்களையோ அல்லது உணர்ச்சிபூர்வமான நேர்மையையோ தவிர்ப்பதில்லை. அவர்களால் தங்கள் சொந்த வினோதங்களையும் தவறுகளையும் பார்த்து சிரிக்க முடியும்.
சாதாரண விஷயங்களில் கூட நகைச்சுவையைக் காண்கிறார்கள் : இந்த தம்பதிகளுக்கு சாதாரணமான விஷயங்கள் கூட வேடிக்கையான ஒன்றாக மாறலாம். துணி துவைக்கும் போது, யார் அசிங்கமான சாக்ஸ் வைத்திருக்கிறார்கள் போன்ற கிண்டல் பேச்சுகள் எழும். இங்கு சலிப்பான வேலைகள் அல்லது வீட்டு வேலைகள் கூட நகைச்சுவைகளுக்கும் முட்டாள்தனமான குரல்களுக்கும் இடம் உண்டு. அன்றாட வாழ்க்கையில் கூட வேடிக்கையானதைக் கண்டுபிடிப்பது பற்றியது. இது ஒரு திறமை; ஒரு மனநிலை; அதைவிட ஒரு பழக்கமாகவே அவர்களிடம் உள்ளது.
இருவரின் பிணைப்பை அதிகபடுத்துவதற்கு நகைச்சுவையை பயன்படுத்துகிறார்கள் : அவர்கள் உண்மையான உரையாடல்களைத் தவிர்க்க நகைச்சுவைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கு நகைச்சுவை என்பது முகமூடி அல்ல; அது கண்ணாடி. விளையாட்டுத்தனமான கிண்டலுக்கும் மூர்க்கத்தனத்திற்கும் இடையிலான கோட்டை அவர்கள் அறிவார்கள். அவர்கள் வேடிக்கையாக இருக்கும்போது கூட ஒருவருக்கொருவர் கவனமாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மோசமான நாளைக் கொண்டிருந்தால், மற்றவர் அதை மறைக்க நகைச்சுவை செய்வதில்லை. பேசும் தொனியைப் போலவே நேரமும் முக்கியம் என்பதை அவர்கள் அறிவார்கள்.
பகிரப்பட்ட நினைவுகளை பத்திரமாக மனதில் வைத்திருக்கிறார்கள் : ஒவ்வொரு தம்பதிகளுக்கும் கதைகள் இருக்கும். ஆனால் ஒன்றாகச் சிரிக்கும் ஜோடிகளுக்கு அருமையான கதைகள் இருக்கும். அபத்தமான தருணங்கள், சாத்தியமில்லாத சாகசங்கள் அல்லது இருவரும் மழையில் நனைந்து வெறுங்காலுடன் டாக்ஸியில் சென்றது போன்ற கதைகள். காலப்போக்கில், இந்தக் கதைகள் அவர்களின் உறவை இறுக்கிப் பிடிக்கும் இழைகளாக மாறுகின்றன. சிரிப்பால் நிரப்பப்பட்ட இந்த நினைவுகள் உணர்ச்சிப் பசையாக செயல்படுகின்றன.
தனிப்பட்ட சங்கேத மொழியின் சக்தி : ஒவ்வொரு தம்பதியினருக்கும் அவரவர் பட்டப்பெயர்கள், புனைப்பெயர்கள் அல்லது கற்பனையான வார்த்தைகள் இருக்கும். அவை வேறு யாருக்கும் புரியாது. ஒன்றாகச் சிரிக்கும் தம்பதிகள் இந்த வகையான சங்கேத வார்த்தைகளைக் கொண்டு தங்கல் உறவை உருவாக்குகிறார்கள். இது அவர்களுக்கென்ற தனிப்பட்ட உலகத்தை உருவாக்குகின்றன. இது அந்தரங்கமானது.
திறமையாக சண்டை போடுவார்கள் : ஆமாம், இந்த ஜோடிகளும் சண்டை போடுகிறார்கள். ஆனால் அவர்களின் நகைச்சுவை உணர்வு அதை எப்படிச் செய்கிறார்கள் என்பதை மாற்றுகிறது. பணம், நேரம் அல்லது திட்டங்கள் குறித்து அவர்களுக்கு இடையே உடன்பாடு இல்லையென்றாலும் ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்து கொள்வார்கள். நகைச்சுவை எல்லாவற்றையும் தீர்க்காது என்றாலும் உணர்ச்சிகரமான சூழலை மாற்றும். இது மன்னிப்பை எளிதாக்குகிறது.
ஒருவரையொருவர் பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள் : ஒன்றாகச் சிரிக்கும் தம்பதிகளுக்கு தாங்கள் எதிலும் ஆர்வமாக இருப்பது தெரியும். ஒருவர் நள்ளிரவில் ஒரு மீம் அனுப்பலாம். மற்றவர் மோசமான நகைச்சுவையைச் சொல்லலாம். பெரும்பாலான மக்கள் தங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்று காத்திருக்கிறார்கள். இந்த தம்பதிகள் அதைத் தேடிச் செல்கிறார்கள். அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அதைக் கண்டடைகிறார்கள்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025