Paristamil Navigation Paristamil advert login

Meulan-en-Yvelines : தொடருந்து நிலையத்தில் வைத்து - தந்தை மகள் மீது தாக்குதல்!

Meulan-en-Yvelines : தொடருந்து நிலையத்தில் வைத்து - தந்தை மகள் மீது தாக்குதல்!

4 ஆவணி 2025 திங்கள் 17:53 | பார்வைகள் : 450


 

Meulan-en-Yvelines (Yvelines) தொடருந்து நிலையத்தில் வைத்து, தந்தை மகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜூலை 27 ஆம் திகதி இச்சம்பசம் இடம்பெற்றுள்ள போதும், அது தொடர்பான தகவல்கள் தற்போதே வெளியாகியுள்ளன. 58 வயதுடைய தந்தையும், அவரது 28 வயதுடைய மகளும் நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். அவர்கள் இருவரும் Stade de France அரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

பிற்பகல் 1.30 மணி அளவில் தொடருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, அவர்களை நெருங்கிய நபர் ஒருவர் அவர்களை அவமதிக்கும் விதத்தில் திட்டதோடு, அவர்களை தாக்கியும் உள்ளார். பின்னர் சில நிமிடங்கள் கழித்து மற்றுமொரு பெண் அங்கு வந்து, அவரும் இணைந்து அவர்களை தாக்கியுள்ளனர்.


அவர்களிடம் இருந்து €140 யூரோக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கமராக்களை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்