Paristamil Navigation Paristamil advert login

சீனாவின் HQ-9B ஏவுகணை அமைப்பை வாங்கிய ஈரான் - பணத்திற்கு பதில் எண்ணெய் மூலமாக பரிவர்த்தனை

சீனாவின் HQ-9B ஏவுகணை அமைப்பை வாங்கிய ஈரான் - பணத்திற்கு பதில் எண்ணெய் மூலமாக பரிவர்த்தனை

4 ஆவணி 2025 திங்கள் 19:20 | பார்வைகள் : 187


இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பல முக்கிய ராணுவ மற்றும் அணுசக்தி தளங்களை இழந்த பிறகு, ஏரான் தனது வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்த புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக சீனாவின் HQ-9B ஏவுகணை அமைப்பை வாங்கியுள்ளது.

ஆனால் இந்த ஒப்பந்தம் சற்று வேறுபட்டதாகும். பணத்திற்கு (Dollar) பதிலாக, எண்ணெய் மூலமாக ஆயுதம் வாங்கும் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் அமெரிக்க ஊடுருவலை தவிர்த்து, சீனாவிற்கு கூடுதல் எண்ணெய் கிடைக்க வழிவகுக்கும்.

HQ-9B (FD-2000B) எனப்படும் இந்த ஏவுகணை அமைப்பு 250 கிமீ வரையிலான தூரத்தை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது. இதன் ரேடார் 100 இலக்குகளை ஒரே நேரத்தில் கண்காணித்து, பல இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது.

இது ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை HQ-9B வான் பாதுகாப்பு அமைப்புகளை ஈரான் பெற்றுள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் இது, ஈரானின் Bavar-373 மற்றும் Chordad-15 போன்ற உள்ளூர் தயாரிப்புகளின் தோல்வியை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், சீனாவின் J-10CE போர் விமானங்களையும் ஈரான் வாங்க முனைவதாக தகவல்கள் வருகின்றன.

இந்த ஒப்பந்தங்கள் மூலம், ஈரான்-சீனா உறவு வலுப்பெறும் நிலையில் இருக்கிறது. இது, மத்திய கிழக்கு ஆயுத சந்தையில் ரஷ்யாவிற்கு சீனா போட்டியாளராக உருவெடுக்கிறது என்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்