நிறுத்தப்படுகிறது FreeWifi சேவைகள்!!

4 ஆவணி 2025 திங்கள் 19:53 | பார்வைகள் : 3484
கடந்த 15 வருடங்களாக வழங்கப்பட்டு வந்த FreeWifi சேவை நிறுத்தப்படுவதாக Free நிறுவனம் அறிவித்துள்ளது.
4G மற்றும் 5G இணைய சேவைகள் ஆக்கிரமித்துள்ள காலத்தில், FreeWifi போன்ற ADSL கால இணைய சேவைகள் மிகவும் பழமையான சேவை என்றாகிவிட்டது. அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளன.
இந்நிலையில், அச்சேவையினை முழுவதுமாக நிறுத்த உள்ளதாக Free நிறுவனம் அறிவித்துள்ளது. சில பிரத்யேக இடங்களில் கிடைக்கும் FreeWifi_Secure சேவைகளும் நிறுத்தப்படுகின்றன.
ஒக்டோபர் 1, 2025 ஆம் திகதி முதல் சேவை முற்றாக செயலிழக்கிறது.