கம்போடியாவில் காணாமல் போன பிரெஞ்சு பெண் சடலமாக மீட்பு!!

4 ஆவணி 2025 திங்கள் 21:15 | பார்வைகள் : 478
கம்போடியாவில் ஒரு 23 வயது பிரான்ஸை சேர்ந்த பெண், லிசா ஜிரார்ட்-பாப்ரே (Lisa Girard-Fabre), காணாமல் போன இரு நாள்களுக்கு பிறகு சியேம் ரீப் (Siem Reap) நகரம் அருகே சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 2ஆம் திகதி காலை ஓட்டத்திற்குச் சென்றபோது கடைசியாக ஒரு கோவிலருகே காணப்பட்டுள்ளார். காவல்துறையும் நண்பர்களும் இரண்டு நாட்கள் தேடலில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் அவரது நண்பர் ஒருவர், திங்கள் காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக உறுதி செய்துள்ளார்.
லிசா, 2024ல் பரிஸிலிருந்து பினாம் பென்னுவரை (Phnom Penh) 4 மாதங்கள் ஹிட்ச்ஹைக் (Hitchhiking -கடந்து செல்லும் வாகனங்களில் இலவச லிப்ட் மூலம் பயணம்செய்தல்) செய்ததுடன், Pour un Sourire d’Enfant என்ற தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டியிருந்தார். அவர் அங்கோர் மரத்தானில் பங்கேற்க 21 கிலோமீட்டர் தூரம் ஓடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். தற்போது அவரது மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025