தேங்காய் எண்ணெயினால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?
5 புரட்டாசி 2021 ஞாயிறு 13:22 | பார்வைகள் : 9119
இந்த பூமியில் உள்ள எந்தவொரு உயிரினத்திற்கும் தேங்காய் நன்மையை மட்டுமே அளிக்கிறது. இது உங்கள் உடலை குளிர்வித்து புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தருகிறது. தேங்காய் எண்ணெயின் பயன்பாடுகள் ஒன்றோ இரண்டோ அல்ல பல நன்மைகளை கொண்டுள்ளது.
தேங்காய் எண்ணெய் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை காக்கிறது. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை உருவாக்குகிறது. தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்துக்கொள்வதிலும், வெளிப்புறமாகத் தோலில் பூசுவதாலும் பல பலன்கள் இருக்கின்றன. தேங்காய் எண்ணெய் உடலுக்கு நலம் தருவதோடு, சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் என்னென்ன நன்மைகளை அளிக்கிறது என்று பார்க்கலாம்.
வாய்வழி நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் :
தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்வது வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும், தேங்காய் எண்ணெய் வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் அழிப்பதற்கு பயன்படுகிறது. மற்றும் இது துர்நாற்றம், பல் சிதைவு, பற்களில் ஏற்படும் ஓட்டை (கேவிட்டிஸ்), ஈறு அழற்சி மற்றும் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை தடுக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்துவந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும். பற்கள், தாடைகளில் இருக்கும் கிருமிகள் அழியும். இது பெரும்பாலும் ஆயுர்வேதத்துடன் தொடர்புடையது. உங்கள் வாயில் தேங்காய் எண்ணெய் கொண்டு கொப்புளிப்பது தான் ஆயில் புல்லிங் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வது வாயில் உள்ள பாக்டீரியாவை அகற்றவும், மற்றும் வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
எடை குறைப்பு :
ஹார்மோன்கள் நமது உடல் பருமனுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளன. ஹார்மோன்களை சமநிலையில் வைத்து உடல் பருமனாகாமல் பார்த்து கொள்கிறது. மேலும், அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் இது குறைத்து விடுகிறது. அத்துடன், இதிலுள்ள நல்ல கொலஸ்ட்ரால் உடல் எடையை கூடாமல் வைக்கிறது.
கொழுப்பின் அளவைக் குறைக்கிறது :
குறைந்த கொழுப்பு இதயம் தொடர்பான வியாதிகளைத் தடுக்கும். உங்கள் உணவில் தேங்காய் எண்ணெயைச் சேர்ப்பது கெட்ட கொழுப்பைக் குறைக்கும். தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் இருப்பதால் நல்ல கொழுப்பின் அளவை மேம்படுத்த முடியும். தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இது மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. தேங்காயில் 90 சதவிகிதம் சாச்சுரேட்டட் வகை கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்குப் பல்வேறு நற்பலன்களைத் தருகிறது.
அரிக்கும் தோல் அழற்சி :
தேங்காய் எண்ணெய், அரிக்கும் தோல் அழற்சி அல்லது அடோபிக் டெர்மடிடிஸுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது. இது ஒரு தீராத தோல் நோய் ஆகும். இது வறண்ட சருமத்தின் திட்டுக்களால் வகைப்படுத்தப்படுகிறது, அவை வீக்கம், அரிப்பு, சிவத்தல், மற்றும் புண் ஆக மாறுகின்றது. தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற (ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ்) பண்புகள் உள்ளன. அவை, சரும ஆரோக்கியத்தை மீட்டு எடுக்கவும், சேதமடைந்த சருமத்தை குணப்படுத்தவும், மற்றும் வடுவைத் தடுக்கவும் உதவுகின்றன. அரிக்கும் தோல் அழற்சிக்கு (சிரங்கு) சிகிச்சை அளிக்க, பாதிக்கப்பட்ட தோலின் மீது ஒரு நாளைக்கு மூன்ற அல்லது நான்கு முறை எக்ஸ்ட்ரா விர்ஜின் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். மேலும், நீங்கள் தினமும் ஒரு முறை ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி எக்ஸ்ட்ரா விர்ஜின் தேங்காய் எண்ணெயை வாய்வழியாக உட்கொள்ளலாம்.
நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது :
தீங்கு விளைவிக்கும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராட ஆண்டிவைரல், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் தேங்காய் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்தது. இதில் லாரிக் அமிலம் இருப்பதால் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் பெரிய சுகாதார பிரச்சினைகளை தீர்க்கும்.
சிறுநீர் தொற்றுக்கு சிகிச்சையளிக்கிறது :
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளால் பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தேங்காய் எண்ணெயை உட்கொள்வது வைரஸ்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும். இது சிறுநீர்ப்பை நோய்கள் மற்றும் சிறுநீரக கல் உருவாவதையும் தடுக்கிறது. போதுமான அளவு நீர் அருந்தாத பலருக்கு சிறுநீரக தொற்றுகள் ஏற்பட கூடும். தேங்காய் எண்ணெய் இயற்கையிலே ஒரு ஆன்டி-பையோட்டிக். எனவே, உங்களின் சிறுநீரக பாதையில் உள்ள தொற்றுக்களை முற்றிலுமாக சரி செய்ய தினமும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிடுங்க. இவை சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்களை அழிக்க கூடிய ஆற்றல் கொண்டவையாம்.
இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது :
உங்கள் உணவில் தேங்காய் எண்ணெயை தவறாமல் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. இது இயற்கையான சர்க்கரைகளைக் கொண்டிருப்பதால் இது மற்ற எண்ணெய்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றாகும். இது இன்சுலின் சென்சிட்டிவிட்டி அதிகரிக்கிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது நீரிழிவு பிரச்சினைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுகிறது.
தேங்காய் எண்ணெயின் இதர நன்மைகள் :-
- தேங்காய் எண்ணெயில் பூஞ்சை, வைரஸ் மற்றும் கிருமி எதிர்ப்பு பண்புகள் உள்ளது.
- ஆரோக்கியமான தலைமுடி கொண்டவர்கள், தலைமுடியைப் பாதுகாக்க விரும்புபவர்கள் தினமும் காலை குளிப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகத் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு தலைக்குக் குளிக்க வேண்டும்.
- தேங்காய் எண்ணெயை கை, காலில் தேய்த்துவிட்டு பெயருக்குத் தலையின் மேற்பரப்பில் படும்படி தேய்ப்பது தவறு. தலையின் மேற்பகுதித் தோலில் (Scalp) படியும்படி நன்றாகத் தேய்க்க வேண்டும்.
- சருமத்தின் தரம், பொலிவு என இரண்டுக்கும் தேங்காய் எண்ணெய் துணைபுரிகிறது. தேங்காய் எண்ணெயை வெளியே தேய்ப்பதால் மட்டும் அல்ல, உணவு மூலமாக உள்ளுக்கு எடுத்துக்கொள்வதாலும் சருமம் பொலிவுபெறும்.
- தேங்காய் எண்ணெயில் ஆன்டிபாக்டீரியா தன்மை கொண்டிருப்பதால், கிருமித்தொற்றைத் தவிர்த்து, சிராய்ப்புக் காயங்களை ஆற்றும்.