பிரான்ஸ்- பிரித்தானியா ‘one-in, one-out’ ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது!

5 ஆவணி 2025 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 4252
பிரான்ஸ் - பிரித்தானியா இணைந்து போட்டுக்கொண்ட one-in, one-out ஒப்பந்தம் ஓகஸட் 5, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி படகில் செல்லும் அகதிகள், சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்கும் விதமாக இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. கடல்மார்க்கமாக செல்லும் ஒவ்வொரு அகதியும் தடுக்கப்படும்போதும், அதற்கு பதிலாக ஒரு அகதியை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘ஒருவர் உள்ளே ஒருவர் வெளியே’ என்பதே இந்த ஒப்பந்தமாகும்.
இந்த திட்டம் உடனடியாகவே பலதரப்பட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக பிரான்ஸ் தரப்பில் பெரும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மூன்று நாட்கள் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதன்போது பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டாமருடன் உரையாடி இந்த ஒப்பந்தத்தினை போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..