Paristamil Navigation Paristamil advert login

64 பேர் நாட்டை விட்டு வெளியேற்றம்!!

64 பேர் நாட்டை விட்டு வெளியேற்றம்!!

5 ஆவணி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 712


 

இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதம் போன்ற செயற்பாடுகளில் தொடர்புபட்ட 64 பேர் இவ்வருடத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Bruno Retailleau தெரிவித்தார்.

நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்கள் எனும் பட்டியல் கொண்ட Fiche S கோப்பில் உள்ளவர்களில் இருந்து அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இவ்வருடத்தில் இதுவரை 64 பேர் அவ்வாறாக வெளியேற்றப்பட்டதாகவும், 5,100 பேரின் விபரங்கள் Fiche S கோப்பில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இவ்வருட இறுதிக்குள் மேலும் புதிதாக பலர் வெளியேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்சில் பயங்கரவாத தீவிரமயமாக்கலை தடுப்பதற்கான அறிக்கைகளின் செயலாக்க கோப்பு ( fichier de traitement des signalements pour la prévention de la radicalisation à caractère terroriste - FSPRT) என்பதே இந்த Fiche S கோப்பு ஆகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்