தங்ககத்தில் தீவிபத்து: குற்றநோக்குடைய செயலாக இருக்கலாம் என சந்தேகம்!

5 ஆவணி 2025 செவ்வாய் 12:18 | பார்வைகள் : 4248
Aveyron ல், Mostuéjouls)நகரத்தில் உள்ள gorges du Tarn பகுதியில் அமைந்துள்ள ஒரு தங்ககத்தில் (hôtel) இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்த விசாரணைத் தொடங்கப்பட்டு, அது குற்றச்செயல் தீவைத்தல் என்று காவற்துறையினர் சந்தேகம் கொண்டுள்ளனர்.
தீ இன்று அதிகாலை மூன்று மணியளவில் பற்றத் தொடங்கியது.. முதலில் Hôtel de la Muse வாகன நிறுத்துமிடத்தில் இருந்த வாகனங்களில் இருந்து தீ மூண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அது தங்ககக் கட்டடத்திற்குள் பரவியது.
கட்டடங்களிற்றகுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன. ஊழியர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அனைவரும் Mostuéjouls நகர சபை மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறையின் செய்தியளிப்பின் படி, தீ பகுதிகள் இரண்டு வேறு இடங்களில் தொடங்கியுள்ளன, இதனால் அது குற்ற நோக்கில் நிகழ்த்தப்பட்ட செயல் என நம்பப்படுகிறது. முதலில் வாகனங்களில் தீ பரவியதாகவும், பின்னர் அது கட்டிடத்திற்குள் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்கிறது
தீயணைப்புப் படையினர் இன்னும் சம்பவ இடத்தில் செயலில் உள்ளனர். தொழில்நுட்ப குற்றவியல் ஆய்வாளர்கள் விரைவில் தீ ஆரம்பித்த இடத்தையும் அதன் பரவல் முறையையும் கண்டறிய முயற்சி செய்யவுள்ளனர்.
மேலும், மிலாவிலிருந்து கார்ஜ் து தார்ன் பகுதிக்குச் செல்லும் D907 சாலை தற்பொழுது போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ள நிலைமை காணப்படுகிறது.
இந்த நிகழ்வு தொடர்பான விசாரணை அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும்வரை, அனுமானங்கள் பலவும் நிலவி வருகின்றன.