Paristamil Navigation Paristamil advert login

இந்திய அணியின் வெற்றி - முகமது சிராஜின் பதிவு வைரல்

இந்திய அணியின் வெற்றி - முகமது சிராஜின் பதிவு வைரல்

5 ஆவணி 2025 செவ்வாய் 15:06 | பார்வைகள் : 433


இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த முகமது சிராஜின் பதிவு ஒன்று வைரலாகியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் (Mohammed Siraj) 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.

ஓவல் டெஸ்டிற்கு முந்தைய நாள் தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டெல் ஸ்டெயின் (Dale Steyn) தனது எக்ஸ் பதிவில், "சிராஜ் 5 விக்கெட்டுகளை எடுப்பார்" என்று குறிப்பிட்டார்.

அவர் கூறியதைப் போலவே சிராஜும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதை குறிப்பிட்டு தற்போது பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், "நீங்கள் கேட்டீர்கள்.நான் செய்துவிட்டேன். உங்களிடம் இருந்து வந்த அன்பிற்கு மிக்க நன்றி" என தெரிவித்துள்ளார். சிராஜின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்