நிலவின் மண்ணில் இருந்து தண்ணீர், ஆக்சிஜன் உருவாக்கிய சீன விஞ்ஞானிகள்!

5 ஆவணி 2025 செவ்வாய் 15:06 | பார்வைகள் : 456
நிலவின் மண்ணில் இருந்து தண்ணீர் மற்றும் ஆக்சிஜனை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
சந்திரனில் நீண்டகால மனித குடியேற்றத்திற்கான முக்கிய முயற்சியாக, சீன விஞ்ஞானிகள் சந்திர மண்ணிலிருந்து தண்ணீரை சுரந்து, அதில் இருந்து ஆக்சிஜனும் எரிபொருள் மூலக்கூறுகளும் உருவாக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இது விண்வெளி ஆராய்ச்சியின் வரலாற்றை மாற்றக்கூடிய முன்னேற்றம் என கருதப்படுகிறது.
ஜூலை 16-ஆம் தேதி Cell Press நிறுவனத்தின் Joule என்ற அறிவியல் இதழில் இந்த கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம், மனிதர்களின் மூச்சில் உள்ள கார்பன் டையாக்ஸைடினை ஒளி மூலம் ஆக்சிஜனாக மாற்றும், அதே நேரத்தில் தண்ணீரையும் சந்திர மண்ணில் இருந்து பெறும் தொழில்நுட்பமாகவும் செயல்படுகிறது.
"சந்திர மண்ணில் இத்தனை 'மாயம்' இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை," எனத் தெரிவிக்கிறார் லூ வாங், ஹொங்ஹொங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம், பூமியிலிருந்து சந்திரனுக்கு தண்ணீர் அல்லது எரிபொருள் எடுத்துச் செல்லும் சிரமம் மற்றும் செலவுகளை குறைக்க முடியும். குறிப்பாக, ஒரு கேலன் (3.78 லிட்டர்) தண்ணீரை பூமியிலிருந்து சந்திரனுக்கு அனுப்ப $83,000 ஆகும்.
சீனாவின் Chang’E-5 மிஷனில் சேகரிக்கப்பட்ட மண்ணில் நீர்த்தன்மை கொண்ட கனிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம் இந்த வளங்களை சுலபமாகவும் குறைந்த எரிசக்தியுடன் பயன்படுத்த வழிவகுக்கிறது.
இன்னும் பல சவால்கள் உள்ளன என்றாலும், இந்த முன்னேற்றம் நிலவில் நிலையான வாழ்விடத்தை உருவாக்கும் கனவுக்கு ஒரு மிகப்பாரிய படியாகக் கருதப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025