Paristamil Navigation Paristamil advert login

Soldat inconnu : அணையா விளக்கில் சிகரெட் பற்றவைத்த நபர்!!

Soldat inconnu : அணையா விளக்கில் சிகரெட் பற்றவைத்த நபர்!!

5 ஆவணி 2025 செவ்வாய் 15:36 | பார்வைகள் : 642


 

பரிஸ் Arc de Triomphe இல் உள்ள அணையாச் சுடரில் நபர் ஒருவர் சிகரெட் பற்றவைத்துள்ளார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிர்நீத்த அடையாளம் தெரியாத இராணுவர்களை போற்றும் விதமாக Soldat inconnu சுடர் அணையாமல் பாதுகாக்கப்படுகிறமை அறிந்ததே. ஜூலை 14 தேசிய நாள் நிகழ்வின் போது அது ஜனாதிபதியதால் ஏற்றப்படுவதும் அறிந்ததே. இந்த அணையாச் சுடரில் நபர் ஒருவர் சிகரெட் பற்றவைக்கும் காட்சி ஒன்று சிறிய காணொளியாக இணையத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்துக்கு பலத்த கண்டனங்கள் பதிவாகி வருகின்றன.

அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும், குறித்த நபர் கைது செய்யப்படவேண்டும் எனும் கண்டனக்குரல்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்