கம்போடியாவில் காணமல் போன பிரெஞ்சு பெண் மாரடைப்பால் இறந்து கிடந்தார்!!
5 ஆவணி 2025 செவ்வாய் 16:05 | பார்வைகள் : 1879
இரண்டு நாட்களாக காணாமல் போன ஒரு இளம் பிரெஞ்சு பெண் கம்போடியாவில் இறந்து கிடந்தார் உள்ளூர் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர், மேலும் இந்த மரணம் மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
டார்ன் (Tarn) பகுதியைச் சேர்ந்த அந்த இளம் பெண், அங்கோர் கோயில்களுக்கு அருகிலுள்ள சுற்றுலா நகரமான சீம் ரீப் (Siem Reap) அருகே, வறண்ட கால்வாயில் இறந்து கிடந்தார் என்று சீம் ரீப் காவல்துறையின் லெப்டினன்ட் கேர்னல் சோக் மெங் எங் (Sok Meng Eang) தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனையின்படி, அந்த பெண் மாரடைப்பால் இறந்ததாகவும், அவரது உடல் கம்போடியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
"அவரது உடலில் எந்த காயங்களோ, வன்முறைக்கான அறிகுறிகளோ இல்லை," என்று சோக் மெங் ஈங் கூறியுள்ளார். சம்பவ இடத்தில் அவரது தொலைபேசி உட்பட தனிப்பட்ட பொருட்கள் காணப்பட்டன என்றும், அவரது உடைகள் நல்ல நிலையில் இருந்தன என்றும் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan