டிரம்ப் வரி மிரட்டல் எதிரொலி : ரஷ்யா செல்கிறார் அஜித்தோவல்

6 ஆவணி 2025 புதன் 11:02 | பார்வைகள் : 141
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள் முதல் செய்து வரும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேலும் வரியை உயர்த்த போவதாக 24 மணி நேர கெடுவிதித்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா பயணம் மேற்கொள்ள உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ச்சியாக அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதால் அந்நாட்டின் பொருட்களுக்கு ஏற்கனவே விதித்த, 25 சதவீத வரியை, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் உயர்த்தப் போகிறேன்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுக்கும் விதமாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், 24 மணி நேரத்திற்குள் முடிவை மாற்றிக் கொள்ளும்படி, இந்தியாவுக்கு அவர் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று திடீர் திருப்பமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அவசர பயணமாக ரஷ்யா செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தோவலை தொடர்ந்து விரைவில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் ரஷ்யா செல்கிறார். இந்திய -ரஷ்யா நட்புறவை வலுப்படுத்தும் விதமாக இருவரும் அமெரிக்காவின் வரி மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025