CSK அணிக்கு செல்கிறாரா சஞ்சு சாம்சன்? - ராஜஸ்தான் ராயல்ஸ் விளக்கம்

6 ஆவணி 2025 புதன் 14:04 | பார்வைகள் : 115
சஞ்சு சாம்சன் CSK அணிக்கு செல்ல உள்ளதாக வெளியான தகவலுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் விளக்கமளித்துள்ளது.
2021 ஐபிஎல் தொடர் முதல் தற்போது வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அணித்தலைவராக இருப்பவர் சஞ்சு சாம்சன்.
இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் CSK அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது.
2026 ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள CSK அணி, அணியில் பல்வேறு மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது.
ஏற்கனேவே ப்ரேவிஸ், ஆயுஷ் மாத்ரே ஆகிய இளம் வீரர்களை அணியில் இணைத்துள்ளது.
மேலும், டிரேடிங் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவர் சஞ்சு சாம்சனை வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இது குறித்து சஞ்சு சாம்சனிடம் கேட்டபோது, இதைப்பற்றி தற்போது பேச வேண்டாம் என தெரிவித்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர்கள் அளித்த விளக்கத்தில், "2026 ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட எந்த ஒரு வீரரையம் டிரேடில் விடும் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இல்லை" என கூறப்பட்டுள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக 9 போட்டிகளில் மட்டுமே விளையாடிய சஞ்சு சாம்சன், 140.39 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 286 ஓட்டங்கள் குவித்துள்ளார். அவர் விளையாடாத போட்டிகளில், ரியான் பராக் அணியை வழிநடத்தினார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025